கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறிக்கி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீபாலமுருக கந்தவேலன், ஸ்ரீ எல்லம்மாள் ஆகிய திருக்கோவில் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு 108 பால்குட பவனி நடைபெற்றது.
மூன்றாம் ஆண்டு வருசாபிஷேக விழாவினை முன்னிட்டு மங்கள இசையுடன் வேதபாராயணம், கணபதி பூஜை, சங்கல்பம், புண்ணியாதானம், கலசஸ்தாபனம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், பஞ்சஸூத்த ஹோமம், ருத்ர ஹோமம், முருகர் மூலமந்திர ஜப ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகப் பூஜைகளும் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது,

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபாலமுருக கந்தவேலனுக்கு 108.க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களுடன் உற்சவர் சுவாமிகளுடன் பவனி வந்தனர், இதன் முன்னதாக கல்லுகுறிக்கி, ஆத்துகால்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற இந்த பால்குடம் ஊர்வலத்தின் போது அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.
தொடர்ந்து கோவிலில், பாலமுருகனுக்கு பால் அபிேஷகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லுக்குறிக்கி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
