தமிழகத்தில் போதைப்பொருள் தாக்கம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது: போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்கும்…
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மரகதம் சந்திரசேகரின் 109-வது பிறந்தநாள் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் தலைமை தாங்கினார்.இதில் மரகதம் சந்திரசேகரின் பேத்தி துஹினா சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு மரகதம் சந்திரசேகர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதகாக கூறும் விவகாரத்தில் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக நிற்போம் .தமிழகத்தில் போதைப்பொருள் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
அந்த போதைப் பழக்கம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் ஒழிப்பதற்கான மூல காரணங்களை கண்டறிந்து தமிழக அரசு ஒடுக்க வேண்டும்.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தவெகவினர் தொடர்புடையதாக இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தவெகவாக இருந்தாலும் சரி , வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
எந்த அரசாங்கமும் சக்தியும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்கக் கூடாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சரிவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. சரிவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு சசிகாந்த் செந்தில் எம் பி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
பேட்டி : சசிகாந்த் செந்தில் – திருவள்ளூர் எம்பி
செய்திகள் : A. மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

