ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 கிடங்குகள் மூலம் 1,292 பள்ளிகளுக்கு மொத்தம் 1,34,812 கேக்குகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல் .
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, பொக்கனாரேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கடுகுசந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கேக்குகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, பரமக்குடி கிடங்கின் மூலம் போகலூர் , பரமக்குடி வட்டாரங்களில் உள்ள 178 பள்ளிகளுக்கு 20,813 கேக்குகளும், கடலாடி கிடங்கின் மூலம் கடலாடி வட்டாரத்தில் உள்ள 172 பள்ளிகளுக்கு 16,838 கேக்குகளும், கமுதி கிடங்கின் மூலம் கமுதி வட்டாரத்தில் உள்ள 164 பள்ளிகளுக்கு 15,202 கேக்குகளும், கீழக்கரை கிடங்கின் மூலம் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள 107 பள்ளிகளுக்கு 13,100 கேக்குகளும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதுகுளத்தூர் கிடங்கின் மூலம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள 121 பள்ளிகளுக்கு 8,702 கேக்குகளும், ராமநாதபுரம் கிடங்கின் மூலம் நயினார்கோவில் , ராமநாதபுரம் வட்டாரங்களில் உள்ள 184 பள்ளிகளுக்கு 19,518 கேக்குகளும், ராமேஸ்வரம் கிடங்கின் மூலம் மண்டபம் வட்டாரத்தில் உள்ள 132 பள்ளிகளுக்கு 21,880 கேக்குகளும், திருவாடானை கிடங்கின் மூலம் திருவாடானை வட்டாரத்தில் உள்ள 127 பள்ளிகளுக்கு 12,711 கேக்குகளும், இராஜசிங்கமங்கலம் ஆர்.எம்.சி. கிடங்கின் மூலம் இராஜசிங்கமங்கலம் வட்டாரத்தில் உள்ள 107 பள்ளிகளுக்கு 6,049 கேக்குகளும் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 9 கிடங்குகளின் வாயிலாக 1,292 பள்ளிகளுக்கு மொத்தம் 1,34,812 கேக்குகள் வழங்கப்பட உள்ளது.
ஆய்வின் போது, மாணவர், மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகளின் மொத்த இருப்பு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய அளவு, கேக்குகளின் தரம், தயாரிப்பு , பாதுகாப்பு முறைகள், இருப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தின் சுகாதாரம் , விநியோக ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவர், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்பட்டும் இருப்பதை உறுதி செய்திடவும், அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கேக்குகளை முறையாக விநியோகம் செய்திடவும். மேலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர், மாணவியர்களுக்கும் கேக்குகள் எவ்வித குறைபாடுமின்றி சென்றடைவதை உறுதி செய்ய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பொக்கனாரேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், பள்ளியில் மாணவர், மாணவியர்களின் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இணையதள வசதி, வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள் , பள்ளிக் கட்டிடத்தின் உறுதித்தன்மை, பராமரிப்பு நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளிக்கு தேவையான இணையதள வசதியை உடனடியாக ஏற்படுத்திட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தியதுடன், பள்ளிக் கட்டிடத்தின் பாதுகாப்பு , பராமரிப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து , கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மேலும் மாணவர்களுக்கு தரமான , சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் , கடலாடி வட்டாட்சியர் சந்திரன் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபாண்டியன் , பாலகிருஷ்ணன் , கீழக்கரை வட்டாட்சியர் இராமசுப்பிரமணியன் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
