இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், தனது 52வது கிளையை இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த நீரிழிவு சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. புதிய கிளையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் இந்த திறப்பு விழாவின் போது கிருஷ்ணகிரி கிளையில் டாக்டர் பாலமுருகன் அவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் சிறப்பு சிகிச்சைகளையும் வழங்க உள்ளார். இக்கிளையில் நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள், சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை குறித்த ஆலோசனைகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் வீட்டிலேயே மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான ஹோம் கேர் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் புதிய கிளையின் தொடக்கம் கிருஷ்ணகிரி மக்களுக்கு சிறப்பு நீரிழிவு மருத்துவ சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பெறுவதற்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நீரிழிவு சிகிச்சைக்காகப் பிற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறையும்.

கிருஷ்ணகிரி கிளையின் தொடக்கத்துடன் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தி, இந்தியா முழுவதும் 52 கிளைகள் மூலம் நீரிழிவு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed