சென்னை காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி. துறையின் மாநில தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறைத் தலைவராக செந்தமிழ்செல்வன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின்
எஸ் சி.துறையின் செயல் தலைவர்களாக கலைச்செல்வன், தமிழ்செல்வன், சரவணகாந்தி, ஜெ.எஸ் ஆறுமுகம் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக காங்கிஸ் கட்சியின் எஸ்.சி. துறையின் செயல் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஊத்தங்கரையை சேர்ந்த ஜெ.எஸ். ஆறுமுகத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. ரகு, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, துறையின் மாநில செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed