காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட கிராம, பகுதி மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக, பணிப் பாதுகாப்பு மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்சேய் நலம், குடும்ப நலம், வளரிளம் பருவத்தினர் நலம் மற்றும் தொற்றுநோய் தடுப்புப் பணிகள் குறித்து, பணிகளை கிராம சுகாதார செவிலியர்கள் செய்யும் பொருட்டு , இடைநிலை பணியாளர்கள் MLHP அவர்கள் செய்வதாக பொய்யான தகவல்களை, சமூக ஊடகங்களில் ஒளி/ஒலிபரப்பியும், பேட்டிகள் அளித்து வரும் இடைநிலை சுகாதார பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்,


அவர்களைத் துணை சுகாதார நிலையத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. தங்களைப் போலத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் களத்தில் நின்று பணியாற்றும் அனைத்து கிராம சுகாதார செவிலியர்களுக்கும் உரிய பணிப் பாதுகாப்பை அரசு உடனடியாக வழங்க வேண்டும் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 16, 2026 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு கிராம / பகுதி / சமுதாய / சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
