மதுரை அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் வேலம்மாள் குளோபல் பள்ளி உள் விளையாட்டு நீச்சல் குளத்தில் (Velammal Indoor Swimming Pool), புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்தி 82 மணி நேர இடைவிடாத தொடர் நீச்சல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

82 நேர தொடர் நீச்சல் சாதனை நிகழ்வு கடந்த 30.10.2026 அன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கி, 02.11.2026 அன்று மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது.

​வேலம்மாள் நீச்சல் அகாடமி (Velammal Swimming Academy), வேலம்மாள் மருத்துவமனை மற்றும் வேலம்மாள் குளோபல் பள்ளி ஆகியவை இணைந்து இந்த புற்று நோய் விழிப்புணர்வு தொடர் நீச்சல் சாதனையை மாணவர்கள் படைத்தனர்.

இந்த 82 மணி நேர தொடர் நீச்சல் சாதனை நிகழ்வில் வேலம்மாள் குளோபல் பள்ளி முதல்வர் வேலுநாதன் பிள்ளை வேலம்மாள் போதி பள்ளி முதல்வர் பாலமுருகன் சிறப்பு உறுப்பினராக வேலம் மாள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ச திருநாவுக்கரசு மற்றும் ‘யுனிவர்சல் ரெக்கார்ட் போரம்’ (Universal Record Book – URB) அமைப்பின் சர்வதேச பார்வையாளரான கின்னஸ் சுனில் ஜோசப் நேரில் பார்வையிட்டு உறுதி செய்து, உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.

மதுரை.
​பங்கேற்பாளர்கள்: வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் வேலம்மாள் நீச்சல் அகாடமியைச் சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் என மொத்தம் 15 நீச்சல் வீரர்கள் இடைவிடாது 82 மணி நேரம் தெடர்ச்சியாக நீந்தி இச்சாதனையை புரிந்தனர்.

“புற்றுநோய் இல்லாத ஆரோக்கியமான நாளைய விடியலுக்காக ஒன்றிணைவோம்” மற்றும் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நீந்துவோம்” என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்தவும் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது.

​82 Hours Non-Stop Swimming World Record Holders ;
​
R. Jhanvi meenakshi
​G. Vijayamaran
​Halina Susan Jijo
​S. Sabarijith
​S. Tanya
​P. Srivenba
​Ajay Karkee.K
​V. Vaishnavi
​D. Pranavavel
​Sanjay Rayar
​N.S. Dharsika
​Arjun Ayyanar
​B. Avanthika
​A. Adesh
​G.D. Inbha

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed