கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் சவாலான மருத்துவ சிகிச்சை செய்து மூன்று முறை அறுவை சிகிச்சை முடித்து 42 நாட்களுக்கு பின் தாய் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புகிறார்.

கடந்த 21.09.2026 ஆம் நாளன்று அசாம் மாநிலத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 30 வயது பெண் ஒருவர் குறைந்த குருதி தட்டணுக்களுடனும் அதிக பிரசவ வலியுடனும் கிருஷ்ணகிரி நகர் பகுதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உயரிடர் பேறுகால பகுதியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருவில் இருந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை வழி பிரசவம் மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது ரத்தம் மற்றும் இரத்த தட்டு அணுக்கள் செலுத்தப்பட்டன. குழந்தைக்கு அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. பின்னர் பெண்மணி உயர் சார்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தட்டணுக்கள் குறைவால் ஏற்பட்ட உட்புற ரத்தப்போக்கை கட்டுப்படுத்த உயிர்காக்கும் நடவடிக்கையாக அவரது கருப்பை இரண்டாவது அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு ரத்தம் மற்றும் ரத்தக்கூறுகள் செலுத்தப்பட்டன. மொத்தமாக 42 யூனிட் ரத்தம் மற்றும் ரத்தக்கூறுகள் செலுத்தப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு இரண்டு நாட்களுக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தம் உறையும் தன்மையை மேம்படுத்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புமிக்க ஃபேக்டர் 7ஏ மருந்து முதல்வர் மறுக்கா சத்தியபாமா மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு சந்திரசேகரன் துணைத்தலைவர் மறுபடி பத்மலதா மற்றும் குருதி வங்கி மருத்துவ அதிகாரி மறு வசந்தகுமார் அவர்களின் முயற்சியால் அவருக்கு செலுத்தப்பட்டது. மருத்துவ குழுவினரின் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பால் உடல்நிலை தேறி வந்த நிலையில் 22 நாட்களுக்குப் பிறகு தொடர் காய்ச்சல் மற்றும் அடி வயிற்றில் ஏற்பட்ட சீழ்ழாள் அவதிப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் தலைமையிலான மருத்துவ குழுவால் மூன்றாவது அறுவை சிகிச்சை மூலம் அச் சீழ் அகற்றப்பட்டது. புரதச்சத்து மிக்க சத்தான உணவுகள் அவருக்கு மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்டது. 42 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை திருப்திகரமாக முன்னேறி காயங்கள் ஆறியுள்ளதால் நாளை அதாவது 4/11/26 அன்று அவர் வீடு திரும்ப உள்ளார். அவருக்கு இன்று முதல்வர் மரு. கா சத்யபாமா அவர்கள் கைத்தறி ஆடை மற்றும் பழங்கள் வழங்கி கௌரவித்தார். சிகிச்சையின் விவரத்தினை மருத்துவ பயனாளிக்கு தெரிவித்தார்.

உடன் மகப்பேறு பிரிவு தலைவர் மரு பத்மலதா உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.கிருபாவதி உதவி பேராசிரியர் ம ரு. மகாலட்சுமி குழந்தைகள் நல பிரிவு துணைத் தலைவர் மரு கவிதா மகப்பேறு மருத்துவர் மரு சண்முகப்பிரியா மரு அருள்மொழி மரு திரிபுரசுந்தரி செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி சரளா மாதவி மற்றும் நிர்வாக அலுவலர் எஸ் கே சரவணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed