விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில், மக்கள் நலன் மற்றும் சமூக மேம்பாட்டை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா சாத்தூர் தொகுதிக்குட்பட்ட சங்கரபாண்டியபுரத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம். லட்சுமணன் ஏற்பாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினர். இவ்விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 120 உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிகாரப்பூர்வமாக தங்களை த வெ க வில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் அனைவருக்கும் சமபந்தி சமவிருந்தும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, கிளை, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed