மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தலைமை தபால் நிலையம் முன்பாக தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.சார்பில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பின்ர் செ.முருகேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். எஸ்.சுந்தரராஜன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர் செயலாளர் ஜீவா, ஏ.பி.மு. இளையராஜா, ஏ.பி.மனோகரன், உள்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ம.தி.மு.க சார்பில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.ஏ.எம் குணா உள்பட கட்சி நிர்வாகிகள்,

சிபிஐ சார்பில் என்.கே.ராஜன், கே.ஜீவா உள்பட நிர்வாகிகள், சிபிஎம்-சார்பில் தி.ராஜா மருத்துவர் டி.கே. பலராமன், காங்கிரஸ் சார்பில் கோதண்டராமன் உள்பட நிர்வாகிகள், சிபிஐ(எம்.எல்) சார்பில் செ. செல்வராஜ் என்.என்.சேகரன் மற்றும் வி.சி.க., மனித நேய மக்கள் கட்சி ,
மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிந்திகள், மகளிர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசில் ஆட்சி செய்யும் பா.ஜ.கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
