கிருஷ்ணகிரி, ஆவின் பால் பொருள்களின் விலை உயர்வில் அரசியல் கட்சியினர்’ அரசியலாக்கி ஆதாயம் தேடவேண்டாம். உங்களுடைய ஆதாரமான தேர்தலில் விவசாயிகள் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்று
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் இராமகவுண்டர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் நாள் ஒன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்யப்படும் பாலை கொண்டு பால்கோவா போன்ற இனிப்பு வகைகளும், கார வகைகளும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட வகையான உப பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு தீபாவளி போன்ற விசேஷங்கள் நாட்களில், பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும் வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு ஆவின் பால் பொருள்களுக்கு விலை உயர்வினை அறிவித்து உள்ளது. ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசியல் கட்சியினர் இதனை அரசியலாக்கி வருகின்றதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் இராமகவுண்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இராமகவுண்டர்….. தமிழகத்தில் மாட்டுத் தீவினங்களின் விலை உயர்வினால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு பால் பொருள்களின் விலையை சற்று உயர்த்தி உள்ளது, இந்த விலை உயர்வு என்பது தனியார் பால் பொருள்களின் விலையை விட மிகவும் மலிவான விலைதான் என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொண்டு இந்த விலை உயர்வினை அரசியலாக்கி ஆதாரம் தேட வேண்டாம். இதன் மூலமாக எங்களுடைய ஆதாரத்தில் அரசியல் செய்து விளையாடினால் விவசாயிகள் உங்களுடைய ஆதாரமான தேர்தலில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
