வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காட்பாடி ரோடு காந்திநகர் அருகே அமைந்துள்ள ஆதி பகவான் நிறுவனத்தில்2024 முதல் 2025, ஆண்டு வரை தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் பொங்கல் அரிசி திட்டம் பெண்கள் குழுக்கள் ஏல சீட்டு மற்றும் டெபாசிட் மூலம் பணம் மோசடி செய்தவர்கள் செல்வம், செந்தில்குமார், வல்லவன், சீனிவாசன், பழனி, பரந்தாமன் ,சூர்யா ஜெயக்குமார், சீனிவாசன், சரிதா, இவர்கள் 10 பேரும் சேர்ந்து பொதுமக்களிடம் மாதம் 500 முதல்10 மாதத்திற்கு மொத்தம் 5,000 வரை வசூலித்து உள்ளனர்.

ஏழை எளிய பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி 8000 பொது மக்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி உள்ளார்கள் நிருபர்களிடம் கூறிய பொதுமக்கள் அதாவது நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் இவர்கள் எங்கள் பகுதிக்கு மாதாமாதம் வந்து பட்டாசு சீட்டு 10 மாதங்கள் கட்டினால் போதும் உங்களுக்கு அரிசி மற்றும் பட்டாசு அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என்று கூறி எங்களிடம் பணம் பெற்று சென்றார்கள்.

10 மாதங்கள் முடிந்த பிறகு நாங்கள் அரிசி மற்றும் பட்டாசு பொருட்களை கேட்டால் தர முடியாது நீங்கள் யாரிடம் பொய் சொன்னாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டும் தோணியில் பேசுகிறார்கள். குறிப்பாக எங்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு போன நபர்கள் சில பேர் தலைமறைவாக உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆகையால் நாங்கள்மன உளைச்சலோடு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஏமாற்றிய 10 பேர் மீது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.
புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777
