அண்மையில் தமிழக அரசு பத்திரப்பதிவில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் விதமாக ஸ்டார் 3.0 வருகை இல்லா ஆவணப்பதிவு என்ற ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையை அறிவித்தது இந்த நடைமுறை மூலம் பத்திரப்பதிவு செய்பவர்கள் அலுவலகத்திற்கே வராமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பத்திரம் பத்திரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் பத்திரப்பதிவு முறை கடந்த புதன்கிழமை தமிழக அரசு தொடங்கி வைத்தது.இந்த நிலையில் பத்திர பதிவுகளை தனியார் துறை இடம் ஒப்படைத்து முதற்கட்டமாக சென்னையில் 53 தனியார் பத்திரபதிவு அலுவலகங்களை திறந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுஇந்த நடைமுறையை தமிழக முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பத்திர எழுத்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் முறைக்கு மாற்றியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் களைந்து, சுமூகமான முறையில் பத்திரப் பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர்கள் சங்கத்தினர் திருமங்கலம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் சார்பு பத்திரப் பதிவு அலுவலகத்தின் முன்பாக திரண்ட ஏராளமான பத்திர நகல் எழுத்தர்கள் அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளதை கண்டித்தும் பத்திரம் பதிவை தனியார் துறைக்கு ஒப்படைத்ததை உடனடியாக நிறுத்த கோரியும் பழைய முறையிலான பத்திரப்பதிவு முறை தொடர்ந்திட வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் இந்த முடிவால் தமிழகம் முழுவதும் உள்ள 50 லட்சம் பத்திர எழுத்தர்களின் குடும்பங்கள்,பத்திர எழுத்தர்களின் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் குடும்பங்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாலும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே பழைய நடைமுறையில் பத்திர பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்பத்திரப்பதிவுகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பத்திர எழுத்தாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பத்திரம் எழுதுவதை நிறுத்தி போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப்ரமணியன்,
கணேசன், பி. கே. கணேசன்,
பாலமணிகண்டன், விஜயகுமார்,
காசிநாதன், சுந்தர், ராஜா,
சரஸ்வதி, ஜெசிந்தா உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed