திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உட்பட்ட பன்னூர் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு கடந்த 3 மாதங்களாக கூலி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணுர் ஊராட்சி பெண்கள் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செய்திகள் : மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777
