சரத் நவரத்திரி திருநாளை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி வேலூர் அருள்மிகு ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமகா வித்யா பீடத்தில் மஹா நவசண்டி யாகம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.

மஹா மண்டலேஸ்வரர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சாக்த ஸ்ரீ கங்கம்மா மாதாஜி ஆச்சார்யர் அவர்களின் தலைமையில் இந்த ஆன்மீக நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த யாகத்தில் மடாதிபதிகள், பீடாதிபதிகள், கங்காமா சுவாமிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் திருநங்கைகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு , பாம்பே, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும்
திருநங்கைகளும் மற்றும் ஏராளமான பக்தர்கள் வருகை யாகத்தில் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கை தலைவிகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இந்த யாகம் சிறப்பாக நடத்தப்பட்டது. ஏற்கனவே சண்டிகையில் 9 சண்டி யாகங்கள் நடத்தப்பட்ட வரிசையில், இந்த நவசண்டி யாகம் கூடுதல் சிறப்புடன்
அமைந்திருந்தது.

இந்த யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சகல தோஷ நிவர்த்தி, திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்குதல், தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பித்தல், குடும்ப வளம் பெறுதல் மற்றும் நோய் நொடி தீர்தல் போன்ற பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாகத்தில் பங்கேற்ற அன்பர்கள் தங்கள் கைகளால் பூர்ணாகுதியை யாகத்தில் செலுத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed