நெல்லை. அக்டோபர்.17
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில், “கணித விந்தைகளைக் கண்டறிவோம்” என்ற தலைப்பில் வாழ்வியல் கணிதக் கண்காட்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தையை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி பென்சிட்டா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி அற்புதமேரி முன்னிலை வகித்து வரவேற்றார்.

குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேனாள் முதுகலைக் கணித ஆசிரியை ரோஸ்லின் ஆனந்தி, கண்காட்சியைத் தொடங்கி வைத்து கணிதக் கண்காட்சியில் ஈடுபட்ட மாணவிகளைப் பாராட்டினார். இந்த கண்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவிகள் பங்கேற்று கணித மாதிரிகள், கணித விளையாட்டுகள் மற்றும் புதிர்கள் ஆகியவைகளை காட்சிப்படுத்தி அதற்கான விளக்கங்களை வழங்கினர். மேலும் வாழ்வியல் கணிதத்தின் பயன்பாட்டுக்களையும், குழந்தை இயேசு பள்ளி மாணவிகள் விளக்கமாக எடுத்துக் கூறினர்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி அற்புதமேரி ஆலோசனையின் பேரில், பள்ளியின் கணித ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர். இந்த கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

செய்தியாளர் தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212
