ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மாவட்ட தலைம மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க . அருண்ராஜ் ஆய்வின் போது , புறநோயாளிகள் பிரிவில் உள்ள ஆண்களுக்கான பொது மருத்துவ பிரிவு, மருந்தகம் , கழிவறை, கர்ப்பிணிகள் மகளிர் நோய் மருத்துவவியல் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு விவரங்களை கேட்டறிந்ததுடன், மருந்துகள் வைத்துக் கொடுக்கும் கவரை வாங்கி ஆய்வு செய்தார். கழிவறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், கழிவறை பகுதிகளில் உள்ள குழாய்களில் நீர்க்கசிவு ஏற்படாத வண்ணம் சீர் செய்யவும்,  ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தரமான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் மகளிர் நோய் மருத்துவவியல் பகுதி, CT கட்டுப்பாட்டு அறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரங்களை பாதுகாத்து வைக்கக்கூடிய பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இம்மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த கொளப்பனூர் பகுதியைச் சேர்ந்த கனலட்சுமியின் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை தமிழ்நாடு அமைச்சர் அணிவித்தார்.
ஆய்வின் போது , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் , சுகாதாரத் துறைச் செயலாளர் தாரை அகமது, பரமக்குடி சார் ஆட்சியர் சி.வினோதினி, சுகாதாரத் துறை நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் நடராஜன், பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு. முத்தரசன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

பரமக்குடியில் 400 படுக்கைகள் கொண்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஜூலை மாதம் 14-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.
முன்பு 400 புறநோயாளிகள் வந்து சென்றனர். தற்போது 900 பேர் வருகின்றனர். முன்பு உள்நோயாளிகள் 100 பேர் இருந்தனர். தற்போது 244 பேர் இருக்கின்றனர். நோயாளிகள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். புதியதாக துவங்கப்பட்ட மருத்துவமனைக்கு தேவையான அனைத்து நிறைவேற்றப்படும். மாலை நேரம் வaரை தான் செயல்படுவதாகவும், இரவு நேரம் இல்லை என்று கூறியதற்கு ஆய்வு செய்து விட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed