ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது  :
 
மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் , ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
    
இதனில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் , நாளிதழ்கள், அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று இன்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
   
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-4 தேர்விற்கான அறிவிப்பு 06.10.2026ம் தேதி அறிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6574 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். 05.11.2026.
   
தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப்-4  தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.10.2026 முதல் வார நாட்களில் நடைபெற உள்ளது.
 
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.
 
இப்பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94439 92758 / 87789 70857 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறுமாறு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed