கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பூச்சி மருந்து கடை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என சமுக வளைத் தளங்களில் செய்திகள் வெளியானதையொட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின்படியும் மாவட்ட வேளாண்மை அலுவலர் வழிக்காட்டுதலின்படியும் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் உரக்கட்டுப்பாடு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் உரக்கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பு இருப்பது கண்டெறியப்பட்டது. மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாவட்ட வேளாண்மை உரக்கட்டுப்பாடு அலுவலர் சுரேஷ்குமார் சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளை விவசாயிகள் யாரும் நம்ப வேண்டாம். ஆகையால் விவசாயிகள் தேவையான யூரியா உள்ளிட்ட அனைத்து உயிர் உரங்களும் அரசு மற்றும் தனியார் கடைகளில் போதுமான அளவில் இருப்பு உள்ளது.

ஆகையால் இந்த உரங்களை விவசாயிகள் தங்கு தடையின்றி பெற்று கொள்ளலாம் என்றும், மேலும் தற்போது பெய்து வரும் பருவமழைக்கு தேவையான உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களை பதுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் உரக்கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடையினையும் பூட்டி சீல் வைக்கப்படும் என்று சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
