ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ளது மம்சாபுரம் இங்குள்ள தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகேசென்றபோது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் முனீஸ்வரன் என்பவரை மின்சாரம் தாக்கியது இதை பார்த்த தலைமை ஆசிரியர் வீரய்யா (வயது52) ஓடிவந்து மாணவரை காப்பாற்ற முயன்றார் அவரையும் மின்சாரம் தாக்கியது.இரண்டு பேரும் மின்சாரம் தாக்கியதில் மயக்கமானார்கள் பின்பு இரண்டு பேரையும் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
செய்திகள் : தேவ தர்ஷினி : எதிரொலி / 8939476777
