சேலம் கோட்டை மைதானத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மேற்கு மண்டலம் சார்பில், கட்சியின் நிறுவனர் கான்சிராம் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் செ.க.சுப்பிரமணி தலைமை வகித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு ஒன்றும் புதிதல்ல, இவிஎம் மிஷின்களை மாற்றி பழைய ஓட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயக ரீதியான வாக்குப்பதிவு நடைபெறும். 

பாஜகவின் சூழ்ச்சியால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தங்களுக்கு தேவையான வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது தொடர்ந்து வாடிக்கையாக உள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தலித் மக்கள் மீதான பார்வை சிறப்பாக உள்ளது. தவெக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் தலித்துக்கள். சிலர் மட்டுமே தலித் மக்களை இழிவு படுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தமிழக வெற்றிக் கழக அரசு இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சியில் சிபிஐ விசாரணைக்கு எதிராக செயல்பட்டு வந்தார்கள். தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆதரவளித்து வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத் தக்கது.

இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான இப்போதுள்ள பார்வையை மாற்ற பகுஜன் சமாஜ் கட்சி தங்களின் மகத்தான பணியை செய்து வருகிறது. வரும் காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு எனது பதில் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதே எனது பதிலாகும். தலித் மக்களை ஒன்றிணைப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரன்பன் மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சக்கரவர்த்தி, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தம்பி கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், சேலம் மத்திய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், வார்டு, கிளை பொறுப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை
9442979467

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed