திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில்சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படத்தை காண மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி திருஷ்டி சுற்றி நடனமாடி கண்டு ரசித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயலர்-2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.


இதன் முதல் காட்சி காலை ஒன்பது மணிக்கு திரையரங்குகளில் ஒளிபரப்பானது. அதேபோல் மீஞ்சூரில் உள்ள மணி திரையரங்கிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தினை காண வந்த ரசிகர்கள், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர் சி சேகர் மற்றும் அன்புச் செழியன் ஆகியோர் தலைமையில் திரண்டு இருந்தனர். அவர்கள் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தியேட்டர் முன்பு கூடி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
மேலும், ரஜினியின் பேனர் முன்பு தேங்காய் பூசணிக்காய் திருஷ்டி சுற்றி உடைத்து மேளதாளம் முழங்க நடனம் ஆடினர். மேலும் இந்நிகழ்வில், மீஞ்சூர் ரஜினி நிர்மல், பட்டமந்திரி சசிநாதன் , தாராட்சி கருணா, முனிவேல், மெரட்டூர் திருமுருகன், பழவை முத்து உட்பட பலர் திரண்டு வந்து இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
