ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், புதுமடம் ஊராட்சியில் , பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கட்டடத்தை தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.2 கோடியே 59 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டிலும், புதுமடம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை , குடிநீர் வசதியுடன் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.2 கோடியே 49 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலும், தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.94 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டிலும், ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.1 கோடியே 41 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டிலும், பொட்டகவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.74 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன.

வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பெருநாழியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், வணிகவரித் துறை சார்பில் பரமக்குடியில் மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கான புதிய வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், இரட்டையூரணி கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து வைத்ததுடன், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், இரட்டையூரணியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா திறந்து வைத்தார்.
தொடர்ந்து , சமூக நலன் , மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், ராதாபுளி ஊராட்சி , பாப்பார்கூட்டம் ஊராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளா ஊராட்சி ஒன்றியம், நல்லிருக்கை ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம், கோரைப்பள்ளம் ஊராட்சி ஆகிய 06 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் ரூ.89.26 இலட்சம் மதிப்பீட்டில் ளதை தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் , மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ரதிதேவி , செய்தி — மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்
மாவட்ட செய்தியாளர்
