மெத்தனமாக உள்ள காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை…


காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மாணிக்கத்தின் மகள் QR கோடு மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கோழிக்கூண்டின் மேற்பகுதியில் உள்ள கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மதுபானங்களை எடுத்து விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால், அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் புகார் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. எனவே, இந்தப் புகார் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மதுபானங்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கிராம மக்களும் அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed