ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு அருகே உள்ள தனியார் நிலங்களில்நேற்று யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது இதனால் தனியார் நிலங்களில் தென்னை மரங்கள் மா மரங்கள் மற்றும் எலுமிச்சை கன்றுகளை யானைகள் சேதப்படுத்தின இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள்விவசாயநிலங்களுக்குள் புகுந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
