கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா பண்டிகையைக் குறிவைத்து ராயக்கோட்டை , ஆலப்பட்டி, சிக்குபூவத்தி, பேரிகை, சூளகிரி, அத்திமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வது வழக்கம், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதிக அளவில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். தசராப் பண்டிகையை குறித்து சாகுபடி செய்யப்பட்ட சாமந்திப் பூக்களின் நல்ல விளைச்சலால் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது

இது குறித்து ராயக்கோட்டை பகுதி சேர்ந்த விவசாயி முனுசாமி கூறுகையில்……
வரவிருக்கும் தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை குறிவைத்து சாமந்தி சாகுபடி செய்து இருந்தாலும் சாமந்தி பூ ஒரளவுக்கு நல்ல விளைச்சல் கண்டுள்ளது பூக்களின் தரமும் சிறப்பாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவார்கள் என்றும், இதன் மூலம் தங்களுக்குக் கணிசமான லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed