மும்பை, மத்திய பிரதேசம், சென்னை, கொச்சி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு!
நெல்லை.அக்டோபர்.10
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில், நவீன இதய படமெடுப்பு (AI-OCT) தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் “இதய இரத்த நாள அடைப்பு சிகிச்சை குறித்த “சிறப்பு மருத்துவப் பயிலரங்கம்” நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் இ.அருணாசலம், மும்பை ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் மூத்த இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ராவ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த மருத்துவப் பயிலரங்கில் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கலான இதய இரத்த நாள அடைப்புக்கான நான்கு முக்கியமான சிகிச்சை முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இரத்த நாளங்களின் உட்புற அமைப்பை துல்லியமாகக் கண்டறிந்து, அடைப்புகளின் தன்மை மற்றும் தீவிரத்தை மதிப்பிட்டு, அதற்கேற்ற சிகிச்சையைத் திட்டமிடுவதில் ஓ.சி.டி. தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற “தேசிய அறிவியல் கருத்தரங்கம்” நிகழ்ச்சிக்கு நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் இ.அருணாசலம் ஏற்பாட்டுத் தலைவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.

இக்கருத்தரங்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த முன்னணி இதய நோய் தலையீட்டு சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு சிக்கலான இரத்த நாள அடைப்புக்கான நவீன சிகிச்சை முறைகள், பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன்(PCI), இதயத்தின் நுண்ணிய இரத்த நாள செயல்பாட்டுக் குறைபாடு (CMD) மற்றும் நவீன இமேஜிங் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த தேசியக் கருத்தரங்கில் நெல்லை அருணா கார்யாக் கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் இ.அருணாசலம், மும்பை ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் டாக்டர் ஆனந்த் ராவ், மத்திய பிரதேச மாநிலம் போபால் மனோரியா ஹார்ட் இன்ஸ்டிடியூட் டாக்டர் பங்கஜ் மனோரியா, கொச்சி லிட்டில் பிளவர் மருத்துவமனையின் டாக்டர் சஜன் நாராயணன், சென்னை காவேரி மருத்துவமனையின் டாக்டர் சி.சுந்தர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷின் டாக்டர் பி.பாலாஜி ஆகியோர் “சவாலான இதய நோய் மருத்துவம் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்” குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இத்தகவலை நெல்லை அருணா காடியாக் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் இ.அருணாசலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பொழுது மருத்துவமனையின் நிருவாக இயக்குனர் டாக்டர் சுவர்ணலதா அருணாசலம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர்.
செய்திகள் : தவசிகனி / எதிரொலி . இன் / 8939476777
