மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வராத நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் 400 குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கருப்பட்டியில் இருந்து மதுரை செல்ல வேண்டிய பேருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் தனியாரிடம் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்குவதாகவும் அதுவும் முறையாக வருவதில்லை என்பதால் சாக்கடை கலந்த கழிவு நீரை தினசரி குடிப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆதிதிராவிடர் பகுதி என்பதால் அரசு முறையாக குடிநீர் வழங்க மறுப்பதாக கூறும் இந்த பகுதி பொதுமக்கள் அருகிலேயே வைகை ஆறு உள்ள நிலையில், குடி தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இந்த பகுதியிலிருந்து அலங்காநல்லூர் வாடிப்பட்டி பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லக்கூடிய நிலையில் அருகிலேயே உள்ள கிராமத்திற்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரம படுவதாகவும் கூறுகின்றனர்.

உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வாடிப்பட்டி பகுதியில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *