விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கூட்டெழுத்து காலாண்டு இதழ் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அலையன்ஸ் பன்னாட்டு சங்கம் இணைந்து புத்தக கண்காட்சியும் புதிய நூல் வெளியீட்டு விழாவையும் நடத்தின.
கிரீன் பீல்ட்ஸ் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா பள்ளியின் தாளாளர் பெரிய மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நல்லதாய் வரவேற்புரை ஆற்றினார். அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் முருகன் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை எழுத்தாளர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

பின்னர் பள்ளி கலையரங்கில் புதிய நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில்
எழுத்தாளர் பி.கே.பெரிய மகாலிங்கம் அவர்கள் எழுதிய “கண் சிமிட்டும் நேரம்” எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை கரிசல் இலக்கிய கழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மதிக்கண்ணன் வெளியிட்டனர். கவிஞர் பொன்.சுப்புராஜ் மாரியப்பன் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட பொருளாளர் சசிரேகா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் வை.வேல்ராஜ், எழுத்தாளர் விஜயகுமார், அலையன்ஸ் பன்னாட்டு சங்க மண்டல தலைவர் குமாரசாமி, மாவட்ட ஆலோசகர் ரவிக்குமார் ராஜா, ஜெகன், சசிரேகா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியை குப்புலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.
செய்திகள் : தேவதர்ஷினி எதிரொலி . இன் / 8939476777
