……………………………………….

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் வாலாஜாபாத் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், நான்கு வயது முதல் 60 வயது வரையிலான 800 பேர் பங்கேற்றனர். சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர்.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல், பல்வேறு சுழற்சி முறைகளில் சிலம்பம் சுற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதன் மூலம், ஒரே நிகழ்வில் 800 பேர் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றிய சாதனை உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டன. சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்ததுடன், சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed