திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பெரவள்ளூரில் வசிப்பவர் வழக்கறிஞர் ராஜா. இவர் பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் ஜிட்டன் கடந்த ஆண்டு பௌத்த மதத்தை தழுவினார். அதன்படி இந்த ஆண்டு பிறந்த நாளை பௌத்த மத பூஜை உடன் நடத்த வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பௌத்த பிக்கு சமண ஆரிய பிரம்மா தலைமையில் புத்த பூஜை நடைபெற்றது.

இதில், சென்னை உயர்நீதிமன்றம்,பொன்னேரி நீதிமன்றங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். பௌத்த மத பெரியோர்கள் சின்னக்காவனம் தன்ராஜ், காந்தி, மூத்த வழக்கறிஞர்கள் ராதா மணவாளன்,அமரகவி, காந்தி, வழக்கறிஞர்கள் சாம்ராஜ்,பெரவள்ளூர் கார்த்திக்,திருமுருகன்,பூதூர் சீனிவாசன், பொன்னேரி கோகுல்,மாஸ்டர் ஞானி யோகா. ஞானசேகர், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆனந்தன், மீஞ்சூர் அபூபக்கர்,கடப்பாக்கம் வாசு,குடியரசு,மகேஷ்,வள்ளல் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பௌத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed