விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் கேட்டால் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நேரடியாகவோ தொலைபேசி வாயிலமாகவோ புகார் அழைக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
காவல்துறை அதிகாரிகளின் தொலைதொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளது அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெற்றாலும், அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பணமாகவோ, பொருளாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏஜெண்டுகள் (இடைத்தரகர்கள்) மூலமாகவோ லஞ்சம் கேட்டாலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் தனியாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு புகாராக அல்லது தகவலாக தெரிவிக்கலாம்.
காவல் துணைக்கண்காணிப்பாளர் 94982-15697, காவல் ஆய்வாளர்-! 94981-06118, காவல் ஆய்வாளர்- 83000-36678, அலுவலக தொலைபேசி எண்.04562-252678 ஆகியோரது கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.
Mail id:- dspvnrdvac.tnpol@nic.in
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476778
