மதுரை மாநகர் W1 திருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
இதனை தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் துருவித், துருவி விசாரணை செய்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்யக் கூடியவர்கள் என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருப்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, போதை மாத்திரைகளை வைத்து இருந்த இளைஞர்கள் ஸ்ரீராம் கௌசிக் (வயது 26) லோகேஸ்வரன் (வயது 29) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்..
திருநகர் போலீசார் அவர்களிடமிருந்து சோதனை செய்ததில் 1013 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
