சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி இவருக்கு. கைகளில் தோள்பட்டை எலும்பு அடிக்கடி வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து பார்த்ததில் நுரையீரலில் உலோக பொருள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மேற்படி பரிசோதனைக்காக பெரியபாளையம் அருகில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு சென்று சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அந்தப் பெண்ணின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வேல்ஸ் மருத்துவக் குழுவினர்கள் ஆலோசனை செய்து 2 மருத்துவர்கள், 1 மயக்க மருந்து நிபுணர், 2 உதவியாளர்கள் குழுவுடன் திருகாணியை ப்ரோன்கோஸ்கோபி-மூலம் 2 மணி நேரமாக போராடி மூக்குத்தி திருகாணியை வெளியே எடுத்தனர். திருகாணியை கையில் வாங்கிய துளசி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ்
மருத்துவக் கண்காணிப்பாளர்
டாக்டர் ஷீலா ராணி நுரையீரல் மருத்துவர் பிரமோத்குமார், சுவாச சிகிச்சையாளர் சரவணன், ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அப்போது மயக்க மருந்து நிபுணர்கள் வெள்ளங்கிரி, சுஜா டெக்னீசியன் ஜாகிர் உசேன், செவிலியர் சாரல், உட்பட பலர் உடன் இருந்தனர்.

இது குறித்து துளசி தெரிவித்ததாவது ;

கடந்த 8 வருடத்திற்கு முன்பு மூக்கில் இருந்த திருகாணி காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் தேடி பார்த்து விட்டு விட்டுவிட்டதாகவும் ஆனால், கடந்த எட்டு வருடமாக நுரையீரலில் சிக்கி இருப்பது பெரும் ஆச்சரியமாகவும் இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும், எளிதாக வேல்ஸ் மருத்துவமனை பிளாங்ஸ் கோப்பி மூலம் வெளியே எடுத்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், வேல்ஸ் மருத்துவமனை மற்றும் டாக்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

செய்திகள் : J மில்டன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed