கனிஷ்கா வயது 46 என்பவர் பல்வேறு யோகா மற்றும் கடினமான உடல் திறன் சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

யோகா கலையின் மூலம் தன் உடல் உறுதியை நிரூபிக்கும் வகையில், கூர்மையான ஆணிப் படுக்கையின் மீது உட்காருவது, உறைபனிக் கட்டியின் (Ice Blocks) மீது நீண்ட நேரம் அமர்ந்து உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற ஆபத்தான மற்றும் பிரம்மிப்பூட்டும் பல சாதனைகளை இவர் ஏற்கெனவே படைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தன் கை விரல்களின் வலிமையைக் கொண்டு இரண்டு விரல்களை பயன்படுத்தி காரை இழுக்கும் (Car Pulling with Fingers) சாதனையை கனிஷ்கா மேற்கொண்டார்.

​இத்தகைய தீவிர யோகா சாதனைகள் உடலின் வலிமை, மன உறுதியைக் கட்டுப்படுத்தும் எனவும், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சாதனையை செய்ததாகவும் கனிஷ்கா பெருமிதத்துடன் கூறினார். மேலும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகனங்கள் ஓட்டும்போது பாதுகாப்பாக ஓட்டவும் வலியுறுத்தினார்.

இத்தகைய ஆபத்தான சாதனைகளை உரிய முறையான பயிற்சிகளும், நிபுணர்களின் வழிகாட்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக முயற்சி செய்யக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed