கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சூளகிரி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்ரி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு
கிராமிய பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், குழந்தை திருமணம் இல்லாத சமுயத்தை உருவாக்கிட வலியுறுத்தி உறுதிமொழி திர்மானத்தை கிராமிய பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் களப்பணியாளர் கீதா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜிடம் வழங்கினார்.

அப்போது அரசு மருந்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ், வேளாண்மை அலுவலர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், கிராம உதவியாளர் தமிழ்செல்வன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்குப்பட்ட சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராமிய பெண்கள் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் குழந்தை திருமணம் இல்லாத நாடாக உருவாக்கிட அனைவரும் நாளில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு அதற்கான உறுதிமொழி தீர்மானத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
