தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், சிறுதொண்டநல்லூர் அஞ்சல், மணலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காலக்குட்டி அம்மன் சமேத ஸ்ரீ போத்தி நாராயண சுவாமி ஆலயத்தில் வருடாபிஷேக விழா இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வருடாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதில், முதல் கட்டமாக இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கி கோயிலில், யாக பூஜைகள் நடத்தப்பட்டது. ஏரல் ஐயப்ப சுவாமிகள் அவர்கள் தலைமையில், மதுரை, திருப்பரங்குன்றம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர்.

பின்னர், யாக பூஜைகள் முடிந்து கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் யாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களை மேள வாத்தியம் முழங்க கோயிலின் உள் வலம் வந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீராட்டு நடத்தப்பட்டு, கோயிலில் கூடி இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கோயிலில் அமைந்துள்ள போத்தி நாராயணன் மற்றும் சுடலைமாடன் உட்பட மூலவர்களாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல், போத்தி நாராயணன், சுடலை மாடசாமி உட்பட அனைத்து மூலவர்களும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் கற்பூர ஆராதனைகளும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து ஆலய நிர்வாக தலைவர் சுடலைமுத்து அவர்கள் கூறுகையில், எங்கள் குலதெய்வமான இந்த போத்தி நாராயணனுடைய ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலின் கொடை திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த கோயிலின் வழக்கப்படி, இந்த ஆண்டு புரட்டாசி மாதம் திருமால் பூஜை இன்று ஒரு நாள் நடத்துவது என திட்டமிடப்பட்டது. அதோடு சேர்த்து வருடாபிஷேகம் நடத்துவது எனவும் முடிவு செய்து, அதன்படி இன்று வருட அபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது, என கூறினார்.

பின்னர் இதனை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணி முதல் திருமால் பூஜை நடைபெற உள்ளது.

செய்திகள் : லெனின் லோகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed