உரிய பூச்சிக்கொல்லி மருந்துக்கள் பயன்படுத்தியும் நோயினை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் ஆதங்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயுதபூஜையை முன்னிட்டு ராயக்கோட்டை, ஆலப்பட்டி, பூவத்தி, பேரிகை, சூளகிரி, தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாமந்திப்பூ , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்வது வழக்கம், கடந்த ஆண்டை போல் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் சாமந்திப்பூ மற்றும் செண்டுமல்லி மலர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் மொட்டுகள் வரும் தருவாயில் பரவலாக வாடல் நோய் தாக்கி செடிகள் அப்படியே கருகி வருவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் மீதியை ஏற்படுத்தி உள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வாடல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் தனியார் உரக்கடைகள் மூலம் பூச்சி மருந்துக்களை வாங்கி பயன்படுத்தியும் நோய் கட்டுப்படுத்த முடியாததால் பெரும் ஆதங்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி முனுசாமி கூறுகையில்….
ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக அதிக அளவில் சாமந்தி பூ சாகுபடி செய்வது உண்டு. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டது. நன்கு வளர்ந்து மொட்டு வரும் நேரத்தில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளதால் செடிகள் கொத்து கொத்தாக கருகி வருகிறது.
இது மட்டுமில்லாமல் வேகமாக இந்த நோய் பரவி வருவதல் சுமார் 500 ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால்
இந்த நோயை கட்டுப்படுத விவசாயிகள் பல லட்ச ரூபாய் செலவு செய்தும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை ஆகையால் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நோய்களை கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

