மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பேரூராட்சியில் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளின் விபரங்களை பரப்புரையாளர்கள் சேகரித்து வருவதாகவும், மேலும், தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு துப்புரவு ஆய்வாளர் எ.ஜெஸி அவர்களால் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் அக்டோபர் 1 ம் தேதியிலிருந்து தரம் பிரித்து வழங்காத வீடுகளில் குப்பைகள் வாங்கப்பட மாட்டாது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சிக்கு ஒத்துழைக்க பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed