ஸ்ரீவில்லிபுத்தூர் செப்டம்பர் 16 ஓங்கி உலகளந்த பரம்பொருளான மகாவிஷ்ணு வைணவ தளங்களில் முக்கிய இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சாயி, வட பெருங்கோயில் உடையான், பள்ளி கொண்ட பரமசாமி எனும் பல திருநாமங்களோடு ஸ்ரீதேவி பூதேவி உடன் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதி கோவிலான இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாளை தான் பெரியாழ்வாரும் ஆண்டாளும் மங்களா சாசனம் செய்து வழிபட்ட சிறப்பு பெற்றதாகும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயில் உடையான் புரட்டாசி திருவிழா நேற்று காலை 15ஆம் சித்திரை நட்சத்திரம் கன்னியா லக்னத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது.
முன்னதாக பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் திருமஞ்சனங்கள் பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற்றது கோவில் அர்ச்சகர் சதீஷ் பட்டர் கொடியேற்றி பூஜைகளை நடத்தி வைத்தார். கொடியேற்று விழா நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் நகராட்சி ஆணையாளர் குமார் மற்றும் வருவாய்த்துறை அறநிலையத்துறை அதிகாரிகள் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வட பெருங் கோயில் உடையான் காலை இரவு வேளைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20 ம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் 23 ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி திருவிழா ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறைஇணை ஆணையர் செ.மாரியப்பன் விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையரும் கோவில் தக்காருமான மு. நாகராஜன் கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.
செய்திகள் : தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
