கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெய்னூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து தமிழக விவசாய சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட தலைவர் ராஜ், மாநிலத் துணைத் தலைவர் செயலாளர் கோணப்பன், மாநில பொருளாளர் உதயகுமார், மாநிலச் செயலாளர் சுபாஷ், மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சம்பத், இளைஞர் அணி மாவட்ட தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேணு கோபால் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்,

இதனைத் தொடர்ந்து பேசிய மாநில தலைவர் வேணுகோபால்…..
தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடியை வரவேற்கிறோம். இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு அதிக அளவில் உள்ளதை தமிழக அரசு கண்காணிக்கப்பட வேண்டும், தமிழக முழுவதும் வறட்சி அதிகரித்துள்ளது. இந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், மேலும் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழகத்தில் ஆவின் மூலம் கொள்முதல் செய்யும் பாலின் விலை உயர்வை உயர்த்திய தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சாகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தின் தமிழக விவசாய சங்கத்தின் இளைஞர் அணிச் செயலாளர் அதிரடி பிரபு, பசுபாதுகாப்பு சங்க தலைவர் சிதம்பரம்,மாவட்ட துணைப் பெருளார் கோபால், மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், ஒன்றிய தலைவர் கமலநாதன்,ஒன்றிய செயலாளர் அரசகுமாரன், கௌரவத் தலைவர் முனிராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா மூர்த்தி, ஒன்றிய மகளிரணி | தலைவி கோவிந்தம்மாள், மேற்கு மாவட்ட தலைவர் ரங்கநாத், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் குள்ளப்பநாயுடு, மேற்கு மாவட்ட செயலாளர் பசுவன், மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed