குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக ஆள்முறையியல் துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டுக் குழு சார்பில், “இளம் தலைமுறை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் தேவைகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை வணிக ஆள்முறையியல் துறைத் தலைவர் முனைவர் ப.சங்கர் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோ.சசிக்குமார் தலைமையுரையாற்றினார். பேராசிரியர் வி.காயத்ரி வரவேற்றார்.

பெங்களூரு ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவன மேலாளர் வே.ரம்யா கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். பெங்களூரு பிருந்தாவன் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் இம்ரான் பாஷா, திறன் மேம்பாடு மற்றும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

கருத்தரங்கில் கல்விப்புல முதன்மையர் முனைவர் த.மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் எஸ்.பாலு நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிக ஆள்முறையியல் துறை பேராசிரியர்கள் மற்றும் அகத்தர உறுதிக்குழுவினர் செய்திருந்தனர்.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி / 893947677

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed