ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2026-27ம் ஆண்டின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வங்கியாளர்களுக்குக்கான மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் வெளியிட்டார். நபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னிரிமை துறைகளுக்கு 2026-27 ம் நிதியாண்டிற்கு, ரூ.15,323.81 கோடி அளவுக்கு வங்கி கடன் அளவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களை நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் வங்கிக்கூட்டத்தில் விளக்கினார். இதன்படி, மாவட்டத்தில் 2026-27 ம் நிதியாண்டில் வேளாண்மைக்கு ரூ.12,200.73 கோடிகளாகவும், நுண், சிறு , குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351.76 கோடிகளாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூ.1,771.32 கோடிகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் , நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண் குமார் , இந்திய ரிசர்வ் வங்கியின் மாவட்ட அதிகாரி அன்பரசு , மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கார்த்திகேயன் வங்கி மேலாளர்கள் செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed