விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் மனைவி காளீஸ்வரி (57). இவர் மற்றும் இவரது மகன் ஜெகன்நாத் (32), இவரது மனைவி பொன்லட்சுமி (30) ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் வாடிக்கையாளர் செலுத்தும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதை நம்பி, 300 க்கும் மேற்பட்டோர் இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினர். ஆனால் செலுத்திய தொகை முதிர்ச்சி காலம் அடைந்தும், பணத்தை திருப்பி தராமல் வாடிக்கையாளர்களை நிதி நிறுவன நிர்வாகிகள் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு போராட்டங்கள், சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது பணத்தை மீட்டு தர வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ரூ. 7 கோடி வரை, வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்துள்ளனர்.

இது குறித்த, புகாரின் பேரில் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காளீஸ்வரி உட்பட 3 பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த நிலையில் காளீஸ்வரி இதுபோன்ற பல்வேறு பணம் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், அவரைக் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவுப்படி, காளீஸ்வரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கடந்த மாதம் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந் நிலையில், தற்போது காளீஸ்வரியின் மகன் ஜெகன்நாத் என்பவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அடைத்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed