சேலத்தில், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஆணழகன் போட்டி, சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில், நடைபெற்றது.

இப்போட்டியினை, கல்லூரி இயக்குனர் டாக்டர், தென்னரசு துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓடெக்ஸ் இளங்கோவன், பொன்சடையன், கல்லாங்காடு சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை உடற்கல்வி இயக்குனர் வடிவேல் ஒருங்கிணைத்தார்.

ஒருநாள் மட்டுமே நடைபெறும் ஆணழகன் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். 60, 65, 70, 75, 80, 85, 90, 90க்கும் மேல் என 8 எடை பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றும் ஆணழகன்களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


சேலம் செய்தியாளர் :
கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777
