செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ம் தேதி குழந்தைகள் தினவிழா பள்ளி தாளாளர் அருட்சகோதரி சுஜி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜான்சி ராணி முன்னிலை வகித்தார். இதில் பள்ளிக் குழந்தைகள் மாறுவேடப் போட்டி பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
