மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேரூராட்சி சானாம்பட்டியில்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
நடைபெற்றது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் அலங்காநல்லூர்
சங்கர விநாயகம் உதவி மருத்துவர்கள் மன்னாடிமங்கலம் சீனிவாசன் கட்சைக கட்டி நிவேதிதா சோழவந்தான் ஜோதிமணி வாடிப்பட்டி பிரவீன் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்று மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படது.

முகாமில் இலவச பணிகள் சிகிச்சைப் பணி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், கண்வாத அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, தடுப்பூசி பணி, தீவனப் பயிர் மற்றும் தீவனப்புல் சாகுபடி விளக்கம், செயற்கை முறை கருவூட்டல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. குறிப்பாக, கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள வெக்கை நோய் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed