விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மகாராஜபுரம் வளாகத்தில் 3 நாட்கள் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடந்தது.
பள்ளித் தாளாளர் விஜயகுமார் திறந்து வைத்தார். பள்ளித் தலைவர் சுந்தர்ராஜப் பெருமாள் முன்னிலை வகித்தார்.
பள்ளிப் பொருளாளர் டாக்டர் பால்சாமி குத்துவிளக்கேற்றினார். பள்ளித் துணைத் தலைவர் ஆரியன் மதுரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தாளாளர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். பள்ளி இணைச் செயலாளர் கூடலிங்கம் மாணவர்களுக்கான விற்பனையை தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க மண்டல தலைவர் சுப்பையா பெற்றுக் கொண்டார். சங்க உறுப்பினர் அறிவொளி முருகன் புத்தகங்கள் வாசிக்கும் முறையையும் வாசிக்கும் பழக்கத்தையும் பற்றி சிறப்புரையாற்றினார்.

புத்தக வாசிப்பு பற்றி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெற்றோர்கள் பொதுமக்கள் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். பள்ளி முதல்வர் சீனிவாசகம், மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சி மற்றும் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி எதிரொலி . இன் / 8939476777
