மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு மிக அருகில் 7 ஸ்டார் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 7 ஸ்டார் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் குடும்பமாக வசிக்கும் கிராமப்புற பகுதியில் மதுக்கடை அமைந்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனை கண்டித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுவை ஒழிப்போம், கிராமத்தை காப்போம், மதுக்கடையை நிரந்தரமாக மூடு என்ற முழக்கங்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பள்ளிகளுக்கு அருகில் உள்ள இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed