​
​புகழ்பெற்ற திரைப்பட நடிகை ராதா அவர்கள், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வழக்கறீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரருடன் நிலவி வரும் சொத்து பிரச்சனை மற்றும் அது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சுமுகமாக முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக, அவர் வழக்கறீஸ்வரர் சுவாமியை வேண்டி சிறப்பு அர்ச்சனை மற்றும் பிரார்த்தனைகளைச் செய்தார்.

நீதிமன்ற வழக்குகள் மற்றும் குடும்ப சிக்கல்கள் நீங்கப் பிரார்த்திக்கும் சிறப்புத் தலமாக இக்கோவில் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழிபாட்டிற்குப் பின் கோவிலுக்கு வந்திருந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்களுடன் அவர் ஒரு சில நிமிடங்கள் உரையாடிச் சென்றார்.

​செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 893946777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed